குரலற்றவர்களின் குரலை உயர்த்தி ஒரு மேடையில்

குறிக்கோள்


நீதிக்குப் புறம்பான அரசியல், சமூகம் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலையில் உலகம் முழுவதும், உரிமைக்குரல் கொடுக்க இயலாத மக்களின் குரலாக இந் “நீதிக்கான குரல்” விளங்குகிறது.

சுரண்டல், மனித உரிமை மறுப்பு, வறுமை போன்றவைகள் எளிய மக்கள் மீதான வாழ்வியல் உரிமைகளைச் சிதைக்கிறது. கல்வி மற்றும் சுகாதார மறுப்பு மேலும் அதிகரிக்கும் குழந்தைகளின் ஊட்டச்சத்தில்லா நிலை, அவர்களின் மரணம் போன்றவை மேலும் அபலைகளான மக்களின் போராட்டக் குணத்தை நீர்த்துப்போகச்செய்துவிடுகிறது.

மனித உரிமை மறுக்கப்பட்ட மக்களின் துயரங்கள் விவரிக்கவே முடியாதவை. இந்த மக்கள் தமது நிலையை உலகின் கவனத்திற்கு கொண்டுசெல்ல இயலாமையின் காரணத்தால் முழுமையான நம்பிக்கையை இழந்து உள்ளார்கள். இந்தச் சூழலில்தான், சில தன்னார்வ, தனிநபர் ஊடகவியலாளர்களும், கல்வியாளர்களும், இப்பதிப்பு ஊடகம் மூலம், உலகின் சரிபாதியாக வாழும் குரல் ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றி அறிந்திராத உலகிற்கு, தகவல் அறியத்தரும், தடம் பதிக்கும் சிறந்த செயலாக முன்னெடுக்க ஒருங்கிணைந்துள்ளனர். தமது கருத்துகளை தடையின்றி வெளிப்படுத்த, இந்த மக்களுக்கு ஒரு குழுமேடையாக விளங்க, இந்த பத்திரிகை எண்ணம் கொண்டுள்ளது.

இந்த மக்களுக்கு எவ்விதம் உதவலாம் என்று எழுந்த கேள்வியின் விளைவாக, அவர்கள் மீது கவனம் செலுத்தும் விதமாக நாங்கள் எங்களால் ஆன வகையில் பங்களிக்க முடிவெடுத்திருக்கிறோம். இந்தப் பதிப்புப் பணி, எந்தவொரு குறிப்பிட்ட கொள்கையையும் வலியுறுத்தவோ அல்லது எந்தவொரு அரசையோ, கட்டமைப்பு நிறுவனத்தையோ, குழுமத்தையோ விமர்சிக்கவோ நோக்கம் கொள்ளவில்லை. இந்த செய்திப் பதிப்புப் பணியை வெற்றி பெறச் செய்ய, செய்தி தொகுத்தல், பகிர்தல், கட்டுரைகள், ஆவணங்கள் சமர்ப்பிப்பு ஆகியவற்றை வழங்குவதுடன் அன்பளிப்பு, நிதியளிப்பு உள்ளிட்டவை மூலம் நீங்களும் இதில் பங்கேற்க உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

முதற்கட்டமாக மாதமொருமுறை இதழாக தொடங்குவோம். வாசகர் மற்றும் வணிக நிறுவனங்கள் அளிக்கும் ஆதரவு பெருகும்போது நாம் இதை மாதமிருமுறையாகவும் பின்பு வாரப் பதிப்பாகவும் ஆக்குவோம்.

ஒன்றிணைந்து இச்சமூகத்தை நம்மால் மாற்ற இயலும்!