போலி சமூக நிகழ்ச்சிகளுக்காகப் பத்திரிகை விளம்பரம் கோரிய ஒருவர் மீது குற்றச் சாட்டு பதிவு
திங்களன்று ஒரு செய்தி வெளியீட்டில், 58 வயதான Oakville நபர் ஏப்ரல் 2011 முதல் மே 31 , 2023 வரை "ஒன்றாரியோ காவல் துறை பொது பாதுகாப்பு செய்திகள் (Ontario Police Public Safety News) என்ற பத்திரிகைக்கு நிதி கோரியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
10 ஆண்டுகளுக்கும் மேலாக தவறான சாக்குப்போக்குகளின் கீழ் பத்திரிகை ஒன்றின் விளம்பரங்களை விற்றதாகக் கூறப்படும் ஒன்றாரியோவைச் சேர்ந்த ஒருவர் $5,000 க்கு மேல் மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்று ரொறன்ரோ காவல்துறையினர்தெரிவித்துள்ளனர்.
திங்களன்று ஒரு செய்தி வெளியீட்டில், 58 வயதான Oakville நபர் ஏப்ரல் 2011 முதல் மே 31 , 2023 வரை "ஒன்றாரியோ காவல் துறை பொது பாதுகாப்பு செய்திகள் (Ontario Police Public Safety News) என்ற பத்திரிகைக்கு நிதி கோரியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பத்திரிகைக்கு ஒரு இணையதளம் உள்ளது. ஆனால் அது எப்படி விநியோகிக்கப்பட்டது, அது அச்சில் இருந்ததா அல்லது ஆன்லைனில் இருந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ரொறன்ரோ காவல்துறை நிதிக் குற்றப்பிரிவு, "காவல்துறைச் சேவைகள் எந்தவொரு நோக்கத்திற்காகவும் பொதுமக்களிடமிருந்து நிதியைப் பெறுவதில்லை" என்பதை மக்களுக்கு நினைவூட்டுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வெள்ளிக்கிழமை நவம்பர் 10 ஆம் தேதி நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட உள்ளார் .