Breaking News
கியூபெக்கின் கிழக்கு நகரியங்களில் ஆஃப்ரோடு வாகனம் ஓட்டிய 13 வயது சிறார் பலி
மாலை 5:45 மணியளவில் லாட்ஸ் மில்ஸ் சாலையில் மோதல் நடந்த இடத்திற்கு அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டன.

கியூபெக்கின் கிழக்கு நகரியங்களில் உள்ள கோட்டிகூக் என்ற நகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆஃப்ரோடு வாகனத்தை ஓட்டி வந்த 13 வயது சிறார் ஒரு வாகன விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாலை 5:45 மணியளவில் லாட்ஸ் மில்ஸ் சாலையில் மோதல் நடந்த இடத்திற்கு அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டன. முதற்கட்ட தகவலின்படி, வாகனம் தனது பாதையை விட்டு விலகி எதிர் திசையில் சென்ற லாரியுடன் மோதியது.
லாரியில் 2 பேர் இருந்தனர். அவர்கள் இருவரும் காயமடையவில்லை. குறித்த வாகனத்தின் இளம் ஓட்டுநர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளார்.
சூரெட் டு கியூபெக் ('கியூபெக்கின் பாதுகாப்பு) இந்த நிகழ்வின் சூழ்நிலைகளை விசாரித்து வருகிறது.