Breaking News
பலுசிஸ்தானில் ராணுவ வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 7 பேர் பலி
ஐஇடி குண்டுவெடிப்பில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்ததாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தானில் செவ்வாய்க்கிழமை வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ஐஇடி குண்டுவெடிப்பில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ராணுவத்தை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்கு எந்தக் குழு பொறுப்பேற்றது என்பது தெரியவில்லை.
மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.