துபாய் பந்தய வெற்றி: மனைவி ஷாலினிக்கு முத்தம் கொடுத்த அஜித்
தனது தாயின் அருகில் நின்று கொண்டிருந்த தனது மகள் அனோஷ்காவை நோக்கித் திரும்பி, அவரையும் அன்புடன் கட்டிப்பிடித்து முத்தமிட்டார்.

துபாய் 24 எச் பந்தய போட்டியில் இந்திய வீரர் அஜித் குமார் மூன்றாவது இடத்தை பிடித்தார். குட் பேட் அக்லி நடிகர் இந்த சாதனையை இதயப்பூர்வமான தருணத்துடன் கொண்டாடினார். குழிப்பாதையில் (பிட்லேனில்) இருந்த தனது மனைவி ஷாலினியை முத்தமிட்டு உற்சாகப்படுத்தினார். இந்த தருணத்தின் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டது.
எக்ஸ்இல் அஜித்குமார் ரசிகர் மன்றம் பகிர்ந்த காணொலியில், அஜித் தனது மனைவி ஷாலினியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து தனது வெற்றியைக் கொண்டாடுவதைக் காணலாம், சுற்றியுள்ள கூட்டம் ஆரவாரம் செய்தது. பின்னர் தனது தாயின் அருகில் நின்று கொண்டிருந்த தனது மகள் அனோஷ்காவை நோக்கித் திரும்பி, அவரையும் அன்புடன் கட்டிப்பிடித்து முத்தமிட்டார்.
மற்றொரு காணொலியில், அவர் இந்தியக் கொடியைப் பிடித்தபடி குழிபாதையில் இருந்து மகிழ்ச்சியுடன் ஓடுவதைக் காணலாம். அதில், "இன்றைய கொண்டாட்டங்களின் சிறந்த தருணம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.