Breaking News
தலங்கம துப்பாக்கிச் சூட்டில் தேடப்பட்டு வந்த முன்னாள் இராணுவ கொமாண்டோ துப்பாக்கிச் சூட்டில் பலி
சந்தேக குற்றவாளி இராணுவத்தின் முன்னாள் கொமாண்டோ ஒருவர் என விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

தலங்கமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிசாரால் தேடப்பட்டு வந்த சந்தேகக் குற்றவாளி ஹங்வெல்லவில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
சந்தேக குற்றவாளி இராணுவத்தின் முன்னாள் கொமாண்டோ ஒருவர் என விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக குற்றவாளியின் வீட்டை விசேட அதிரடிப்படையினர் சோதனையிட்ட போது, கைக்குண்டு, மோட்டார் சைக்கிள் மற்றும் போலி இலக்க தகடு என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 25ஆம் திகதி தலங்கமவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ரொபர்ட் குணவர்தன மாவத்தையில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 44 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டார்.