Breaking News
வங்காளத்தின் தேர்தல் ஆணையராக ராஜீவ் சின்ஹா நியமனம்
முதல்வர் மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய அதிகாரிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் அஜீவ் சின்ஹா, அம்மாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட உள்ளார். முதல்வர் மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய அதிகாரிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். அவரது நியமனம் மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்டது.
ராஜீவ் சின்ஹாவின் நியமனத்துக்கு மேற்கு வங்க ஆளுநர் சிவி ஆனந்த் போஸ் ஒப்புதல் அளித்துள்ளார். வங்காளத்தில் வரவிருக்கும் பஞ்சாயத்துத் தேர்தல், மாநிலத் தேர்தல் ஆணையராக இருக்கும் அவருடைய மேற்பார்வையில் நடைபெறும். இந்த ஆண்டு பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது ஆனால் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.