Breaking News
புதிய வர்த்தக வரிவிதிப்பு குறித்து அமெரிக்க தூதுவருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்
அமெரிக்க ஏற்றுமதிகளுக்குப் பரஸ்பர நடவடிக்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதாகவும் சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்தார்.

அமெரிக்காவுக்கான சிறிலங்காவின் ஏற்றுமதி மீது விதிக்கப்பட்டுள்ள புதிய வர்த்தக வரிகள் குறித்துச் சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்குடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கலந்துரையாடியுள்ளார்.
அமெரிக்காவுடனான சிறிலங்காவின் வர்த்தக உறவுகளை மீளச் சமநிலைப்படுத்துவது குறித்து கலந்துரையாடல் கவனம் செலுத்தியதாகவும், அமெரிக்க ஏற்றுமதிகளுக்குப் பரஸ்பர நடவடிக்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதாகவும் சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்தார்.
மேலும், அமெரிக்கத் தூதர் "ஒரு நியாயமான, சமநிலையான வர்த்தக உறவு பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கிறது. மேலும் அது வேலைகளை உருவாக்கி இரு நாடுகளிலும் தொழில்களை பலப்படுத்துகிறது," என்று குறிப்பிட்டார்.