புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டம் உண்மையான சுயாதீன ஆணைக்குழுவை நிறுவும்: முன்னாள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்
இந்த ஆணைக்குழுவை நசுக்குவதற்கான எந்தவொரு முயற்சிக்கும் மக்களின் கடும் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சரத் ஜயமான்ன, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தயாரித்துள்ள ‘101 கதை’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது, புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் உண்மையான சுயாதீன ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும் என அறிவித்தார்.
இந்த ஆணைக்குழுவை நசுக்குவதற்கான எந்தவொரு முயற்சிக்கும் மக்களின் கடும் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள அரசாங்க தலைவர்களும் அதிகாரிகளும் ஊக்குவிக்க வேண்டும் என்றும், “திருடர்கள் பிடிபடவில்லை, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் திருடர்களைப் பிடிப்போம்” போன்ற வெற்றுக் கோஷங்களிலிருந்து விலகிச் செல்லுமாறும் சரத் ஜயமான்ன மேலும் கேட்டுக் கொண்டார். இலஞ்சம் மற்றும் ஊழல் என்பது இலங்கை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள பொருளாதாரங்களை பாதிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.