அமெரிக்கா-இஸ்ரேல் ஈரானை சுக்குநூறாக தகர்க்கும் என்ற செய்திகள் மிகைப்படுத்தப்பட்டவை: டிரம்ப்
கூற்றுக்களை நிராகரித்த டிரம்ப், இதுபோன்ற ஊகங்கள் "பெரிதும் மிகைப்படுத்தப்பட்டவை" என்று தெளிவுபடுத்தினார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள நிலையில், "ஈரானை சுக்குநூறாகத் தகர்க்க" யூத தேசத்துடன் வாஷிங்டன் கைகோர்த்து செயல்படுகிறது என்று கூறப்படும் செய்திகளை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மறுத்துள்ளார். கூற்றுக்களை நிராகரித்த டிரம்ப், இதுபோன்ற ஊகங்கள் "பெரிதும் மிகைப்படுத்தப்பட்டவை" என்று தெளிவுபடுத்தினார்.
"இஸ்ரேலுடன் இணைந்து செயல்படும் அமெரிக்கா, ஈரானைச் சுக்குநூறாக சிதறடிக்கப் போகிறது என்ற செய்திகள் பெரிதும் மிகைப்படுத்தப்பட்டவை. ஈரான் அமைதியாக வளரவும், செழிக்கவும் உதவும் ஒரு சரிபார்க்கப்பட்ட அணுசக்தி அமைதி ஒப்பந்தத்தை நான் மிகவும் விரும்புகிறேன்" என்று அவர் கூறினார்.
நெதன்யாகு செவ்வாயன்று வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்தார். ஜனவரி 20 அன்று டிரம்ப் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் ஓவல் அலுவலகத்திற்கு வருகை தந்த முதல் வெளிநாட்டுத் தலைவர் நெத்தனியாகு ஆவார்.