பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் கட்சி உறுப்புரிமையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ரத்து செய்துள்ளது
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் 23 மே 2023 அன்று அறிவிக்கப்படாத தங்கம் மற்றும் கைத்தொலைபேசிகளுடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
நாட்டிற்கு தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்ய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் 23 மே 2023 அன்று அறிவிக்கப்படாத தங்கம் மற்றும் கைத்தொலைபேசிகளுடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினரிடம் இருந்து மொத்தம் 3.5 கிலோகிராம் தங்கம் மற்றும் 91 கையடக்கத் தொலைபேசிகளை விமான நிலையத்தில் கடமையாற்றும் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
எவ்வாறாயினும், 7.5 மில்லியன் ரூபா அபராதம் செலுத்திய பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் விடுவிக்கப்பட்டார்.