வருடத்தின் இறுதி மாதங்களில் கணிசமான சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கை எதிர்பார்க்கிறது: இராஜாங்க அமைச்சர்
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை அவர் வலியுறுத்தியதுடன், பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக டாக்ஸி சங்கங்களை நிறுவுதல் போன்ற முன்முயற்சிகளைக் குறிப்பிட்டார் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வருட இறுதிக்குள் 1.5 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைக்கும் நோக்கில் விளம்பரப் பிரச்சாரங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே அறிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை அவர் வலியுறுத்தியதுடன், பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக டாக்ஸி சங்கங்களை நிறுவுதல் போன்ற முன்முயற்சிகளைக் குறிப்பிட்டார் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று (27) ஜனாதிபதி ஊடக மையத்தில் 'நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை' என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் டயானா கமகே, அதிக சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட நகரங்களை துடிப்பான, இடைவிடாத இடங்களாக மாற்றியமைப்பதையும் எடுத்துரைத்தார் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.