Breaking News
ஜெர்மனியில் இருந்து இந்தியா திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணா கைது
ஜெர்மனியில் இருந்து வந்த பிரஜ்வால் கெம்பேகவுடா பன்னாட்டு விமான நிலையத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழுவினரால் (எஸ்ஐடி) கைது செய்யப்பட்டு விசாரணைக்காக சிஐடி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மதச்சார்பற்ற ஜனதா தள எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா வெள்ளிக்கிழமை அதிகாலை பெங்களூருக்கு வந்திறங்கியபோது கைது செய்யப்பட்டார்.
ஜெர்மனியில் இருந்து வந்த பிரஜ்வால் கெம்பேகவுடா பன்னாட்டு விமான நிலையத்தில் சிறப்பு புலனாய்வுக் குழுவினரால் (எஸ்ஐடி) கைது செய்யப்பட்டு விசாரணைக்காக சிஐடி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஹாசன் மக்களவைத் தொகுதியில் இருந்து என்.டி.ஏ வேட்பாளரான பிரஜ்வால், கர்நாடகாவில் பல பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் ஆபாச காணொலிகள் பரவத் தொடங்கியதால் ஏப்ரல் மாதம் நாட்டை விட்டு வெளியேறினார்.