Breaking News
ஷாகித் அப்ரிடி தான் எனது ஹீரோ, அவரைப் போல் கிரிக்கெட் விளையாடுவதே எனது முயற்சி: ஷாஹீன் ஷா அப்ரிடி
“சாதனைகள் உடைக்கப்பட வேண்டும், நாங்கள் பாகிஸ்தானுக்காக சாதனைகளை படைத்துள்ளோம் என்பது மகிழ்ச்சியான சந்தர்ப்பம்”என்று போட்டிக்குப் பிறகு ஷஹீன் கூறியதாக ஜியோ ஸ்போர்ட்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஆல்-ரவுண்டர் ஷாகித் அப்ரிடியைப் போல அச்சமற்ற கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறேன் என்று ஷஹீன் ஷா அப்ரிடி கூறினார். அக்டோபர் 31 , செவ்வாய்கிழமை , ஷாஹீன் தனது 51 வது போட்டியில் ஒருநாள் போட்டிகளில் மிக வேகமாக 100 விக்கெட்டுகளை கடந்த வேகப்பந்து வீச்சாளர் ஆனார் .
“சாதனைகள் உடைக்கப்பட வேண்டும், நாங்கள் பாகிஸ்தானுக்காக சாதனைகளை படைத்துள்ளோம் என்பது மகிழ்ச்சியான சந்தர்ப்பம்”என்று போட்டிக்குப் பிறகு ஷஹீன் கூறியதாக ஜியோ ஸ்போர்ட்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
“ஷாகித் அப்ரிடி எப்போதும் எங்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்; அவர்தான் என் ஹீரோ. அவரைப் போல் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதே எனது முயற்சி”என்று அவர் கூறினார்.