Breaking News
கடத்தல் வழக்கு: எச்.டி.ரேவண்ணாவுக்குப் பெங்களூரு நீதிமன்றம் நிபந்தனைப் பிணை வழங்கியது
முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான எச்.டி.தேவகவுடாவின் மகன் எச்.டி.ரேவண்ணா மீது ஏப்ரல் 29 ஆம் தேதி ஒரு பெண்ணைக் கடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மகன் பிரஜ்வால் மீதான பாலியல் புகார் வழக்கில் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் எச்.டி.ரேவண்ணாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் நிபந்தனைப் பிணை வழங்கியுள்ளது.
பெண் கடத்தல் தொடர்பான வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மே 14 வரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு பிணை வழங்கப்பட்டது. 5 லட்சம் தனிப்பட்ட பத்திரத்தை வழங்கவும், விசாரணைக்கு ஒத்துழைக்கவும் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான எச்.டி.தேவகவுடாவின் மகன் எச்.டி.ரேவண்ணா மீது ஏப்ரல் 29 ஆம் தேதி ஒரு பெண்ணைக் கடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா மீது பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.