யோஷித ராஜபக்ஷ விளக்கமறியலில் வைப்பு
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்த பின்னர் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்ஷ நாளை (25) கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் முன் நிறுத்தப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை பெலியத்த பிரதேசத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர் இன்று 5 ஆம் இலக்க மேலதிக நீதவான் பவித்திரா சஞ்சீவனி முன்னிலையில் நிறுத்தப்படுத்தப்பட்டார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்த பின்னர் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
34 மில்லியன் ரூபா பெறுமதியான காணி வழக்கில் யோஷித ராஜபக்சவை பிரதிவாதியாக பெயரிடுவதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாகச் சட்டமா அதிபர் ஜனவரி 23 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்ததை அடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.