தேர்தல் நாளில் கனேடியர்கள் தனக்கு வாக்களிக்க வேண்டும்: டிரம்ப்
"கனடாவின் சிறந்த மக்களுக்கு நல்வாழ்த்துக்கள்" என்று டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் எழுதினார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திங்களன்று கூட்டாட்சி தேர்தலில் தன்னை முன்னிறுத்திக் கூறினார். கனேடியர்கள் வாக்களிக்கச் செல்லும்போது அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று பரிந்துரைப்பது போல் தோன்றியது.
"கனடாவின் சிறந்த மக்களுக்கு நல்வாழ்த்துக்கள்" என்று டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் எழுதினார்.
"கனடாவானது அமெரிக்காவின் 51 வது மாநிலமாக மாறினால், உங்கள் வரிகளை பாதியாக குறைக்கவும், உங்கள் இராணுவ சக்தியை இலவசமாக, உலகின் மிக உயர்ந்த மட்டத்திற்கு அதிகரிக்கவும், உங்கள் கார், எஃகு, அலுமினியம், மரம், எரிசக்தி மற்றும் பிற அனைத்து வணிகங்களையும், அளவிலும் நான்கு மடங்காக, பூஜ்ஜிய வரிவீதங்கள் அல்லது வரிகளுடன் வைத்திருக்கும் வலிமையும் ஞானமும் கொண்ட மனிதரைத் தேர்ந்தெடுங்கள்.
கனடா அமெரிக்காவுடன் இணைவது நாட்டிற்கு அனுகூலமாக இருக்கும் என்ற தனது வாதத்தை மீண்டும் ட்ரம்ப் தனது பதிவில் வலியுறுத்திக் குறிப்பிட்டார், அத்துடன் அமெரிக்கா கனடாவுக்கு "ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை" மானியம் வழங்குகிறது என்ற பொய்யான கூற்றையும் மீண்டும் வலியுறுத்தினார்.