பாஜக அரசை தாலிபான்களுடன் ஒப்பிட்ட மாயாவதி மருமகன் மீது வழக்கு
மாநிலத்தில் 16,000 கடத்தல்கள் நடந்துள்ளதாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி) அறிக்கை கூறுகிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்து குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியாத அரசுக்கு வெட்கக்கேடு.

உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் மருமகன் ஆகாஷ் ஆனந்த் மற்றும் 4 பேர் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
"இது துரோகிகளின் அரசு (உ.பி). தனது இளைஞர்களை பட்டினி போட்டு, முதியவர்களை அடிமைப்படுத்தும் கட்சி ஒரு பயங்கரவாத அரசாங்கம். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் அத்தகைய அரசாங்கத்தை நடத்துகிறார்கள்" என்று ஆகாஷா ஆனந்த் அதே பேரணியில் கூறினார்.
"உ.பி.யில் புல்டோசர் அரசாங்கம் உள்ளது. ஆனால் பிரதமர் அதை மறுக்கிறார். மாநிலத்தில் 16,000 கடத்தல்கள் நடந்துள்ளதாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி) அறிக்கை கூறுகிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்து குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியாத அரசுக்கு வெட்கக்கேடு.
பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆகாஷ் ஆனந்த், கட்சி வேட்பாளர் மகேந்திர யாதவ், ஷியாம் அவஸ்தி, அக்ஷய் கல்ரா மற்றும் விகாஸ் ராஜ்வன்ஷி ஆகியோர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 171 சி, 153 பி, 188, 502 (2) மற்றும் ஆர்பி சட்டத்தின் பிரிவு 125 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.