கியூபெக் முழுவதும் குடியேற்றம் மக்கள்தொகை வளர்ச்சியைத் தூண்டுகிறது: புள்ளிவிவர நிறுவனம்
நோர்ட்-டு-கியூபெக், அபிதிபி டெமிஸ்காமிங்கு, மற்றும் காஸ்பீசி-ஐல்ஸ்-டி-லா-மேடலின் ஆகியவற்றில் வளர்ச்சி மிகவும் மிதமாக இருந்தது.
கியூபெக்கில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளும் ஜூலை 2022 மற்றும் ஜூலை 2023 க்கு இடையில் மக்கள்தொகை வளர்ச்சியைக் கண்டன, மொன்றியல் மற்றும் கியூபெக் நகரத்தில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்பட்டது.
கியூபெக்கின் புள்ளியியல் நிறுவனம் (Institut de la statistique du Québec- ISQ) புதனன்று வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 1986-87ல் இந்த புவியியல் மட்டத்தில் தகவல் சேகரிப்பு தொடங்கியதில் இருந்து மாகாணத்தின் பாதி பிராந்தியங்கள் மிக உயர்ந்த வளர்ச்சி விகிதங்களை பதிவு செய்துள்ளன.
மொன்றியல் அனைத்து பிராந்தியங்களையும் விட வலுவான வளர்ச்சியை அனுபவித்தது, அதன் மக்கள் தொகை 89,600 அதிகரித்துள்ளது - மாகாணத்தின் ஒட்டுமொத்த 2.3 சதவீதத்துடன் ஒப்பிடும்போது 4.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த வளர்ச்சி மாகாணத்தின் மொத்த வருடாந்திர அதிகரிப்பில் 44 சதவீதமாகும் என்று கியூபெக்கின் புள்ளியியல் நிறுவனம் கூறுகிறது. பல குடியிருப்பாளர்களை மற்ற பிராந்தியங்களுக்கு இழந்த போதிலும், மொன்றியலின் மக்கள்தொகை வளர்ச்சி கணிசமான சர்வதேச இடம்பெயர்வு ஆதாயங்களால் இயக்கப்பட்டது.
"இது ஆச்சரியமல்ல" என்று கியூபெக்கின் புள்ளியியல் நிறுவனம் மக்கள்தொகை ஆய்வாளர் மார்டின் செயின்ட்-அமோர் கூறினார்.
"ஏனென்றால் சமீபத்திய ஆண்டுகளில் கியூபெக்கில் மக்கள்தொகை வளர்ச்சியை உந்துவது வெளிப்புற குடியேற்றம், குறிப்பாக தற்காலிக குடியேற்றம் தான் என்பதை எங்களுக்குக் காட்டும் தரவு கியூபெக் மட்டத்தில் எங்களிடம் ஏற்கனவே உள்ளது."
குடியேற்றம் மொன்றியலில் குவிந்துள்ளது என்பதையும் தரவு காட்டுகிறது என்று அவர் கூறினார்.
கியூபெக் நகரம் 20,678 குடியிருப்பாளர்களின் அதிகரிப்பைக் கண்டது, சர்வதேச இடம்பெயர்வு இந்த புதிய மக்களில் 18,494 பேருக்கு பங்களித்தது.
கிழக்கு நகரியங்கள், சென்டர்-டு-கியூபெக், சௌடியர்-அப்பலாச்ஸ், மௌரிசி, மொன்டெரெகி, சாகுனே-லாக்-செயிண்ட்-ஜீன் மற்றும் பாஸ்-செயிண்ட்-லாரன்ட் பகுதிகளிலும் மக்கள்தொகை வளர்ச்சி புதிய உயரங்களை எட்டியது.
தி லானாடியர், லாரன்டியன்ஸ், லாவல், மற்றும் அவுட்டாயிஸ் பிராந்தியங்களும் வலுவான வளர்ச்சியை அனுபவித்தன. ஆனால் புதிய சாதனைகளை அமைக்கவில்லை.
நோர்ட்-டு-கியூபெக், அபிதிபி டெமிஸ்காமிங்கு, மற்றும் காஸ்பீசி-ஐல்ஸ்-டி-லா-மேடலின் ஆகியவற்றில் வளர்ச்சி மிகவும் மிதமாக இருந்தது. அதே நேரத்தில் கோட்-நோர்டில் மக்கள் தொகை நிலையானதாக இருந்தது.
ஒட்டுமொத்தமாக, பன்னாட்டு இடம்பெயர்வு, குறிப்பாக தற்காலிக குடியேற்றம், மாகாணத்தின் மக்கள்தொகை வளர்ச்சிக்கு முக்கிய உந்துதலாக இருந்தது என்று கியூபெக்கின் புள்ளியியல் நிறுவனம் கூறுகிறது.
தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்கள், புகலிடம் கோருவோர் மற்றும் பண்ணட்டு மாணவர்கள் போன்ற நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களின் முன்னோடியில்லாத அதிகரிப்பு காரணமாக சாதனை ஆதாயங்கள் ஏற்பட்டன. நிரந்தர குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருந்தாலும், அது மிகச் சிறிய அளவில் இருந்தது.
கியூபெக்கின் பெரும்பாலான பிராந்தியங்களில், இயற்கையான மக்கள்தொகை அதிகரிப்பு (பிறப்பு கழித்தல் இறப்புகள்) 2023 இல் குறைந்துள்ளது. முதன்மையாக பிறப்புகளின் வீழ்ச்சி காரணமாக, இறப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்று கியூபெக்கின் புள்ளியியல் நிறுவனம் கூறுகிறது.
17 பிராந்தியங்களில் 10 இல் பிறப்புகளை விட அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளன, இது காஸ்பீசி-ஐல்ஸ்-டி-லா-மேடலின், பாஸ்-செயிண்ட்-லாரன்ட் மற்றும் மௌரிசி போன்ற வயதான மக்கள்தொகை கொண்ட பிராந்தியங்களில் பல ஆண்டுகளாக காணப்படுகிறது.
"இறப்புகளை விட பிறப்புகள் அதிகமாக இருந்த சில பிராந்தியங்களில் கூட, இயற்கையான அதிகரிப்பு குறைவாக இருந்தது மற்றும் மக்கள் தொகை வளர்ச்சியில் குறைந்த பங்கைக் கொண்டிருந்தது" என்று கியூபெக்கின் புள்ளியியல் நிறுவனம் தனது இணையதளத்தில் கூறுகிறது. "ஒட்டுமொத்தமாக கியூபெக்கில், இயற்கையான அதிகரிப்பு கடந்த ஆண்டில் பூஜ்ஜியத்திற்கு அருகில் இருந்தது."