Breaking News
எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும்: எரான் விக்ரமரத்ன
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டதை கேள்விப்பட்ட உடனேயே பிரேமதாசவின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு ஐக்கிய மக்கள் சக்திய அமைப்பு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ள நிலையில், ஜனாதிபதி தேர்தலின் போது வேட்பாளர்கள் மீதான தாக்குதல்கள் அமெரிக்க பாணியில் இடம்பெறலாம் என சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டதை கேள்விப்பட்ட உடனேயே பிரேமதாசவின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாசவின் பாதுகாப்புக்கு அரசாங்கமே பொறுப்பு. எனவே அவரது பாதுகாப்பை அதிகரிக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன் என்று விக்ரமரத்ன கூறினார்.