சுமந்திரன் அனுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டவுள்ள தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க இதுவரை வெளியிடப்பட்டுள்ள பெறுபேறுகளின்படி மொத்தமாக 301,756 (53.75%) வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சமகி ஜன பலவேகய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 117,842 (20.99%) வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும், சுயேச்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 106,508 (18.97) வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார்.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டவுள்ள தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"இன, மத பேதமின்றி சாதித்து சாதனை படைத்த அனுராதிசநாயக்காவுக்கு வாழ்த்துகள். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆலோசனையின் பேரில் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்து, தேர்தல் வரைபடத்தில் வேறுபாட்டைக் காட்டிய வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு எமது நன்றிகள். " என தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி தனது எக்ஸ் கணக்கில் எழுதினார்.