Breaking News
உக்ரைனின் கீவ் நகரில் ரஷ்யாவின் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதலில் 3 பேர் பலி
மூன்றுபேர் இறந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்ய படைகள் சனிக்கிழமை அதிகாலை நடத்திய ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதலில் 3 பேர்உயிரிழந்தனர்.
இராணுவ நிர்வாகத் தலைவர் தைமூர் ட்காசென்கோவின் கூற்றுப்படி, வான் பாதுகாப்பு படையினர் தாக்குதலை முறியடித்தபோது விடியற்காலையில் வானத்தில் வெடிப்புகள் வெடித்தன. இதில் மேலும் மூன்று பேர் காயமடைந்தனர். நான்கு பேர் கொல்லப்பட்டதாக அவர் கூறினார், அதே நேரத்தில் மூன்றுபேர் இறந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஒரு மெட்ரோ நிலையம் மற்றும் தண்ணீர்க் குழாயும் சேதமடைந்தன என்று கீவ்மேயர் விட்டாலி கிளிட்ஷ்கோ தெரிவித்தார்.