Breaking News
ஜப்பானை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த சீனா

உலகின் முன்னணி கார் ஏற்றுமதியாளராக ஜப்பானை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடம் பிடித்துள்ளது.
2023 முதல் காலாண்டில் 1.07 மில்லியன் கார்களை ஏற்றுமதி செய்துள்ளதாக சீன அதிகாரிகள் கூறுகின்றனர். அந்த காலகட்டத்தில் ஜப்பான் 954,185 கார்களை மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது.
இதற்கிடையில், பெட்ரோலில் இயங்கும் கார்களுக்குப் பதிலாக மின்சார கார்களுக்கு சீனா முன்னுரிமை அளித்தது தங்களுக்கு சாதகமாக அமைந்தது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
தற்போது, உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் தங்கள் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை அளித்துள்ளன.
2022 ஆம் ஆண்டில், சீன மின்சார கார்களின் ஏற்றுமதி முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 90 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.