Breaking News
கிரிக்கெட் வீரர் அஷேன் பண்டார கைது
பிணையில் விடுவிக்கப்பட்ட அவர், அடுத்த புதன்கிழமை கெஸ்பாவ நீதவான் நீதிமன்றத்தில் முன் தோன்றுமாறு அறிவுறுத்தப்பட்டார்.

பிலியந்தலை, கோலமுனை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் அத்துமீறி நுழைந்து ஒருவரை தாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் கிரிக்கெட் வீரர் அஷேன் பண்டார கைது செய்யப்பட்டுள்ளார்.
பிலியந்தலை காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய பண்டார கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட அவர், அடுத்த புதன்கிழமை கெஸ்பாவ நீதவான் நீதிமன்றத்தில் முன் தோன்றுமாறு அறிவுறுத்தப்பட்டார்.
பண்டாரவும் முறைப்பாட்டாளரும் அயலவர்கள் எனவும், பண்டார தனது காரை வீதியை மறிக்கக்கூடிய வகையில் நிறுத்தியதை அடுத்து இந்தச் சர்ச்சை எழுந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.