கனேடியத் தேசியக் கண்காட்சி சவாரியில் காயமடைந்த 18 வயது இளைஞர் மருத்துவமனையில் அனுமதி: ரொறன்ரோ காவல்துறை
18 வயது இளைஞன் சவாரியில் இருந்து தவறி விழுந்து பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ரொறொன்ரோ மருத்துவ உதவியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
"கனேடியத் தேசியக் கண்காட்சியில் சவாரி செய்யும் போது இளைஞர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்" என்று ரொறன்ரோ காவல் துறை கூறுகிறது.
திங்கட்கிழமை இரவு 9:30 க்கு சற்று முன்னர் லேக் ஷோர் பவுல்வர்ட் வெஸ்ட் மற்றும் டஃபெரின் தெருவுக்கு அருகிலுள்ள கனேடியத் தேசியக் கண்காட்சி மைதானத்திற்கு அவர்கள் அழைக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
18 வயது இளைஞன் சவாரியில் இருந்து தவறி விழுந்து பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ரொறொன்ரோ மருத்துவ உதவியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தொழில்நுட்ப தரநிலைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடத்தப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
அந்த இளைஞன் எப்படி காயமடைந்தார், எதில் சவாரி செய்தார் என்பது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.