Breaking News
ஜம்மு காஷ்மீரில் மெஹபூபா முப்தியின் கட்சியுடன் ஆட்சியமைக்க ஃபரூக் அப்துல்லா தயார்
ஜம்மு காஷ்மீரில் மெகபூபா முப்தியின் பிடிபி ஆதரவுடன் ஆட்சி அமைக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா ஞாயிற்றுக்கிழமை, ஜம்மு காஷ்மீரில் மெகபூபா முப்தியின் பிடிபி ஆதரவுடன் ஆட்சி அமைக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
சாத்தியமான கூட்டணிகள் குறித்து பேசிய அவர், பிராந்தியத்தில் வேலையின்மை மற்றும் பத்திரிகை சுதந்திரம் போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண பிடிபி-யிடம் இருந்து ஆதரவைப் பெறுவது குறித்துத் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணி பரிசீலிக்கலாம் என்றார்.