ரோஹிங்கியா அகதிகள் மியன்மாருக்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிராகப் பேரணி
கடந்த மாதம் இந்தியப் பெருங்கடல் தீவு நாட்டில் மீட்கப்பட்ட 100 க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவதாக அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து அவர்களைக் காப்பாற்ற சிறிலங்காவில் உள்ள உரிமையியல் குடிமைக் (சிவில்சமூகக்) குழுக்கள் மற்றும் ஆர்வலர்கள் அணி திரண்டுள்ளனர். டிசம்பர் 19 அன்று வடகிழக்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரையில் சுமார் 100 ரோஹிங்கியா அகதிகள் மீட்கப்பட்டனர். ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவது குறித்து மியான்மர் அதிகாரிகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இலங்கையின் பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால ஜனவரி 3 அன்று அறிவித்ததை அடுத்து, முல்லைத்தீவு மற்றும் தலைநகர் கொழும்பில் சமீபத்தில் பல ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. "இவர்கள் நாடற்ற மக்கள், அவர்களுக்கு செல்லநாடு இல்லை. ரோஹிங்கியாக்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே படுகொலை செய்யப்பட்டு துரத்தப்பட்டு அச்சுறுத்தப்படுகிறார்கள், அதனால்தான் அவர்கள் தங்கள் சொந்த நாட்டைவிட்டு வேறு இடங்களில் பசுமையான மேய்ச்சல் நிலங்களைத் தேடி வெளியேறினர்" என்று வெள்ளிக்கிழமை கொழும்பில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற சமூக ஆர்வலர் தஸ்னீமா தஹ்லான் அரப் நியூஸிடம் கூறினார்.
கடந்த மாதம் இந்தியப் பெருங்கடல் தீவு நாட்டில் மீட்கப்பட்ட 100 க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவதாக அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து அவர்களைக் காப்பாற்ற சிறிலங்காவில் உள்ள உரிமையியல் குடிமைக் (சிவில்சமூகக்) குழுக்கள் மற்றும் ஆர்வலர்கள் அணி திரண்டுள்ளனர்.
டிசம்பர் 19 அன்று வடகிழக்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரையில் சுமார் 100 ரோஹிங்கியா அகதிகள் மீட்கப்பட்டனர்.
ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவது குறித்து மியான்மர் அதிகாரிகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இலங்கையின் பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால ஜனவரி 3 அன்று அறிவித்ததை அடுத்து, முல்லைத்தீவு மற்றும் தலைநகர் கொழும்பில் சமீபத்தில் பல ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
"இவர்கள் நாடற்ற மக்கள், அவர்களுக்கு செல்லநாடு இல்லை. ரோஹிங்கியாக்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே படுகொலை செய்யப்பட்டு துரத்தப்பட்டு அச்சுறுத்தப்படுகிறார்கள், அதனால்தான் அவர்கள் தங்கள் சொந்த நாட்டைவிட்டு வேறு இடங்களில் பசுமையான மேய்ச்சல் நிலங்களைத் தேடி வெளியேறினர்" என்று வெள்ளிக்கிழமை கொழும்பில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற சமூக ஆர்வலர் தஸ்னீமா தஹ்லான் அரப் நியூஸிடம் கூறினார்.