தமிழக வீரரின் ருத்ரதாண்டவத்தால் வீழ்ந்தது கொல்கத்தா

தமிழக வீரரின் ருத்ர தாண்டவத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஈடன் கார்டனில் நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி முதலில் துடுப்பெடுத்தாடி 179 ஓட்டங்கள் குவித்தது.
அந்த அணியின் குர்பாஸ் 81 ஓட்டங்களும், ரஸல் 34 ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய குஜராத் அணியில் கில் 49 ஓட்டங்கள் எடுத்து நரைன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் அணித்தலைவர் ஹர்திக் பாண்டியா 26 ஓட்டங்களில் வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய தமிழக வீரர் விஜய் ஷங்கர் சிக்ஸர் மழை பொழிந்தார். மறுமுனையில் டேவிட் மில்லர் அதிரடி காட்டினார். இதன்மூலம் குஜராத் அணி 17.5 ஓவரில் 180 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விஜய் ஷங்கர் 24 பந்துகளில் 5 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்களும், மில்லர் 18 பந்துகளில் 32 ஓட்டங்களும் எடுத்தனர்.