மொழிப்போரை சமாளிக்க மு.க.ஸ்டாலின் சூளுரை
இந்தியை சிம்மாசனத்தில் அமர வைத்த பிறகு சமஸ்கிருதத்தை கொண்டு வருவார்கள்.

தமிழர்களின் அடையாளத்தை பாதுகாக்க மொழிப்போரை தொடர்ந்து நடத்துவோம் என்றும், இந்தி, சமஸ்கிருதம் திணிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துவோம் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.
மொழிப் போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், கல்வி உரிமையை மீட்டெடுக்க திமுகவின் மாணவர் அணி போராட்டங்களை நடத்தும் என்று கூறினார்
இந்தி பேசாத மாநிலங்களின் உரிமைகளை காப்பாற்ற திமுக மாணவர் அணி டெல்லியில் 'கல்வி உரிமை' போராட்டம் நடத்தும்.இந்தி அல்லது சமஸ்கிருதத்தைத் திணிப்பது பற்றி மட்டுமே மத்திய அரசு யோசிக்கிறது. தமிழை அழிக்க அந்நிய இந்தி திணிக்கப்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
அவர்கள் (பாஜக) இந்திக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் அவர்கள் சமஸ்கிருதத்தை ஆதரிக்கிறார்கள். இந்தியை சிம்மாசனத்தில் அமர வைத்த பிறகு சமஸ்கிருதத்தை கொண்டு வருவார்கள்.
மொழி மற்றும் கலாச்சார திணிப்பு முயற்சிகளை நாம் கடந்து வந்துள்ளோம். பழந்தமிழ்ச் சமூகத்தின் மீது ஆரிய மொழியைத் திணிக்க இயலாத நிலையில், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூலம் அதைத் திணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நிலம் கொடுத்து, உள்கட்டமைப்பை உருவாக்கி, வேந்தரை நியமிக்கும் பல்கலைக் கழகங்களைப் பராமரிக்க முடியாதா? முதல்வரை வேந்தரை மக்கள் ஏன் தேர்ந்தெடுக்கக் கூடாது?" என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.