Breaking News
சிறிலங்காவின் கிராபைட் சுரங்கத்தை கையகப்படுத்த இந்தியா திட்டம்
கிராபைட் சுரங்கங்களைக் கையகப்படுத்துவது தொடர்பாக சிறிலங்கா அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவில் கிராபைட் சுரங்கங்களைக் கையகப்படுத்த இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. லித்தியம்-அயன் மற்றும் பிற மின்கலங்களில் (பேட்டரி) அனோட்களுக்கு பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான பொருளான கிராபைட்டின் தேவை சீராக அதிகரித்து வருகிறது.
அங்கு கிராபைட் சுரங்கங்களைக் கையகப்படுத்துவது தொடர்பாக சிறிலங்கா அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், பேச்சுவார்த்தை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால் மேலதிக விவரங்களை தெரிவிக்க அந்த வட்டாரங்கள் மறுத்துவிட்டன.
சிறிலங்காவில் காணப்படும் கிராபைட் மிகவும் தரம் வாய்ந்தது.