ஹெரோங்கேட் மால் வாகன நிறுத்துமிடத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து கொலைப் பிரிவு விசாரணை
வெள்ளிக்கிழமை, கொல்லப்பட்டவர் ஒட்டாவாவைச் சேர்ந்த அகமது சலீம்-அல்-பத்ரி, 34 எனக் காவல்துறையால் அடையாளம் காணப்பட்டார்.

மால் வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் வியாழக்கிழமை இரவு ஒருவர் காயமடைந்து இறந்ததார். இது தொடர்பாக ஒட்டாவா காவல் துறைச் சேவையின் கொலைப் பிரிவு விசாரித்து வருகிறது.
வியாழன் இரவு 7:30 மணிக்குப் பிறகு ஹெரான் மற்றும் வாக்லி சாலையின் சந்திப்புக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறப்பட்ட தகவல்களுக்குக் காவல் துறை பதிலளித்தது.
அங்கு வந்த அதிகாரிகள், ஒரு வாகனத்தில் ஒருவரை பலத்த காயங்களுடன் கண்டனர். அவர்களுக்குச் செயற்கைச் சுவாசச் சிகிச்சை அளிக்கப்பட்டது. துணை மருத்துவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவர் காயம் காரணமாக இறந்தார் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை, கொல்லப்பட்டவர் ஒட்டாவாவைச் சேர்ந்த அகமது சலீம்-அல்-பத்ரி, 34 எனக் காவல்துறையால் அடையாளம் காணப்பட்டார்.
காணொலிக் காட்சிகள் உட்பட தகவல் தெரிந்தவர்கள் கொலைப் பிரிவைத் தொடர்பு கொள்ளுமாறு ஒட்டாவா காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.