சமந்தா-நாக சைதன்யா விவாகரத்து விவகாரம்: தெலுங்கானா அமைச்சருக்கு நீதிமன்றம் அறிவிக்கை
நாம்பள்ளி சிறப்புக் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அடுத்த விசாரணையை அக்டோபர் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
நடிகர்கள் நாக சைதன்யா, சமந்தா பிரபு ஆகியோரின் விவாகரத்து குறித்து விளக்கம் அளிக்குமாறு தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகாவுக்கு ஹைதராபாத் நீதிமன்றம் அறிவிக்கை அனுப்பியுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சுரேகா தனது விளக்கத்தை அக்டோபர் 23-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்) பிரிவு 356 இன் கீழ் நாம்பள்ளி நீதிமன்றத்தில் நாக சைதன்யாவின் தந்தை நாகார்ஜுனா அக்கினேனி தெலுங்கானா அமைச்சருக்கு எதிராக கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்ததைத் தொடர்ந்து நீதிமன்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இரண்டாவது சாட்சியான வெங்கடேஸ்வரா தனது சாட்சியத்தை முடித்ததை அடுத்து, நாம்பள்ளி சிறப்புக் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அடுத்த விசாரணையை அக்டோபர் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.