உலக அரசாங்க மாநாட்டில் ஜனாதிபதி திசாநாயக்க பங்கேற்பு
தனது உரையில், நிலையான அபிவிருத்தி மற்றும் பன்னாட்டு ஒத்துழைப்புக்கான சிறிலங்காவின் அர்ப்பணிப்பையும் எடுத்துரைத்தார்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க துபாயில் நடைபெற்ற 2025 உலக அரசாங்கங்களின் உச்சி மாநாட்டின் பிரதான அமர்வில் உரையாற்றினார், அங்கு அவர் பொருளாதார வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் நிர்வாக மறுசீரமைப்பு குறித்த இலங்கையின் பார்வையை கோடிட்டுக் காட்டினார்.
அவர் தனது உரையில், நிலையான அபிவிருத்தி மற்றும் பன்னாட்டு ஒத்துழைப்புக்கான சிறிலங்காவின் அர்ப்பணிப்பையும் எடுத்துரைத்தார்.
பகலில், ஜனாதிபதி பாகிஸ்தான் பிரதமர் முகமது ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்தார். சிறிலங்காவில் தனது அரசாங்கத்தின் குறிப்பிடத்தக்க தேர்தல் வெற்றியை முன்னிட்டு ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு பிரதமர் ஷெரீப் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதி திசாநாயக்க முன்னாள் பிரித்தானிய பிரதமர் டோனி பிளேயரையும் சந்தித்தார். பல்வேறு துறைகளில் ஐக்கிய இராச்சியத்தின் நிபுணத்துவம் மற்றும் விசேட அறிவைச் சிறிலங்கா பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைச் சுற்றி இந்தக் கலந்துரையாடல் சுழன்றது.
ஜனாதிபதி திசாநாயக்க அவர்கள் இந்த உச்சிமாநாட்டின் இடையே குவைத் இராஜாங்க அமைச்சர் ஷேக் அஹமட் அப்துல்லா அல் அஹ்மத் அல் சபா அவர்களையும் சந்தித்தார்.