Breaking News
ஹேமா குழு அறிக்கை: கேரள அரசுக்கு ஜேபி நட்டா கடும் கண்டனம்
சிபிஎம் தலைவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் முதல்வர் பினராயி விஜயன் எதையோ மறைக்கிறார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத கேரள அரசை பாஜக தேசிய தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டா ஞாயிற்றுக்கிழமை கடுமையாக சாடியுள்ளார். சிபிஎம் தலைவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் முதல்வர் பினராயி விஜயன் எதையோ மறைக்கிறார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
கேரளாவின் பாலக்காட்டில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களுடன் நட்டா பேசுகையில், "கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு இதில் தொடர்பு இருப்பதாக ஹேமா கமிட்டி அறிக்கை குறிப்பிட்டுச் சொல்லியிருப்பதைக் கூற மிகவும் வருந்துகிறேன்.