பிப்பிரவரியில் பணவீக்கம் 5.9% ஆக சரிவு
2024 பிப்பிரவரிக்கான உணவல்லாப் பிரிவின் வருடாந்தப் பணவீக்கம் (புள்ளி) 2024 சனவரியில் 7.9 சதவீதத்திலிருந்து 7.0 சதவீதத்திற்கு குறைந்தது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் ஜனவரியில் பதிவு செய்யப்பட்ட 6.4 வீதத்தில் இருந்து பிப்பிரவரியில் 5.9 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் 200.7ல் இருந்து 200.6 புள்ளிகள் வரை சுருங்கியது.
பிப்பிரவரியில், உணவு வகையின் வருடாந்திரப் பணவீக்கம் (புள்ளி) ஆண்டுக்கு ஆண்டு 3.5 சதவீதமாக அதிகரித்தது. 2024 ஜனவரியில் இது 3.3 சதவீதமாக பதிவாகியுள்ளது.
அதேவேளை, 2024 பிப்பிரவரிக்கான உணவல்லாப் பிரிவின் வருடாந்தப் பணவீக்கம் (புள்ளி) 2024 சனவரியில் 7.9 சதவீதத்திலிருந்து 7.0 சதவீதத்திற்கு குறைந்தது.
பிப்பிரவரியில் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் முன்னைய மாதத்தின் 176.2 இலிருந்து 177.2 ஆக அதிகரித்தது.
குறியீட்டுக் குறிப்புடன் ஒப்பிடுகையில் பொதுவான விலை மட்டம் 100.6 சதவீதத்திற்கு அதிகரித்துள்ளது.