Breaking News
காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருந்த மற்றொரு இஸ்ரேலிய பிணைக்கைதி பலி
தெற்கு இஸ்ரேலிய சமூகமான கிபுட்ஸ் நிரிமிடமிருந்து பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட நடாவ் பாப்பில்வெல், காசாவில் இஸ்ரேலியத் தாக்குதலில் காயமடைந்து இறந்தார் என்று ஹமாஸ் ஒரு காணொலியை வெளியிட்டது.

இஸ்ரேல் மீது அக்டோபர் 7 ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலின் போது கடத்தப்பட்ட பணயக் கைதிகளில் ஒருவர் இறந்துவிட்டதாக ஹமாஸ் சனிக்கிழமை கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தெற்கு இஸ்ரேலிய சமூகமான கிபுட்ஸ் நிரிமிடமிருந்து பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட நடாவ் பாப்பில்வெல், காசாவில் இஸ்ரேலியத் தாக்குதலில் காயமடைந்து இறந்தார் என்று ஹமாஸ் ஒரு காணொலியை வெளியிட்டது.
சமீபத்திய காணொலி குறித்து இஸ்ரேலிய இராணுவம் உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை. ஹமாசால் விடுவிக்கப்பட்ட பணயக் கைதிகளின் முந்தைய காணொலிகளை உளவியல் பயங்கரவாதம் என்று அது குறிப்பிட்டுள்ளது. பிணைக்கைதிகள் இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர் என்ற ஹமாசின் முந்தைய குற்றச்சாட்டுக்களில் சிலவற்றையும் அது மறுத்துள்ளது.