யுனெஸ்கோ நிறைவேற்று சபைக்கு சிறிலங்கா தெரிவு
யுனெஸ்கோவின் உறுப்பு நாடுகள், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த 9 வேட்பாளர்களில் 6 உறுப்பினர்களை யுனெஸ்கோ நிர்வாகக் குழுவுக்குத் தேர்ந்தெடுத்தன.

ஐக்கிய நாடுகள் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) 2023-2027 ஆம் ஆண்டுக்கான நிறைவேற்று சபைக்குச் சிறிலங்கா புதன்கிழமை (15) பாரிசில் நடைபெற்ற 42 வது பொது மாநாட்டில் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இத்தேர்தலில் வாக்களித்த 188 உறுப்பு நாடுகளில் சிறிலங்கா 144 வாக்குகளைப் பெற்று, பங்களாதேஷுடன் இணைந்து பிராந்தியத்திலிருந்து 3 வது அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது என்று வெளிவிவகார அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
யுனெஸ்கோவின் உறுப்பு நாடுகள், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த 9 வேட்பாளர்களில் 6 உறுப்பினர்களை யுனெஸ்கோ நிர்வாகக் குழுவுக்குத் தேர்ந்தெடுத்தன. பாகிஸ்தான், இந்தோனேசியா, பங்களாதேஷ், கொரிய குடியரசு மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை இந்த பிராந்தியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிற நாடுகளாகும். சிறிலங்கா கடைசியாக 2015 முதல் 2019 வரை நிறைவேற்றுச் சபையில் சேவையாற்றியது.