கட்டார் வெளிவிவகார இராஜாங்க அமைச்சருடன் பாதுகாப்பு அமைச்சர், பிரதி நிதியமைச்சர் சந்திப்பு
இராஜாங்க அமைச்சர் அல்-முராய்கி சிறிலங்காவின் வெளிவிவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறைப் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரவையும் வெள்ளிக்கிழமை சந்தித்தார்.

கட்டார் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சுல்தான் பின் சாத் அல் முராய்கி சிறிலங்காவின் வெளிவிவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தைக் கொழும்பில் சந்தித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் அல்-முராய்கி சிறிலங்காவின் வெளிவிவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறைப் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரவையும் வெள்ளிக்கிழமை சந்தித்தார்.
இந்தச் சந்திப்புகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு உறவுகள் மற்றும் அவற்றை அபிவிருத்தி செய்வதற்கான வழிகள் மற்றும் பொதுவான அக்கறை கொண்ட பல விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
"இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதை மையமாகக் கொண்ட ஒரு பயனுள்ள கலந்துரையாடலை நாங்கள் நடத்தினோம். எமது உறவுகளைப் பலப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்" என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.