Breaking News
2025 ஆம் ஆண்டளவில் இடம்பெயர்ந்தவர்கள் எவரும் இருக்கக்கூடாது: ஜனாதிபதி
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வியாழக்கிழமை (04) கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினை தொடர முடியாது எனவும், 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் எவரும் இருக்கக் கூடாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வியாழக்கிழமை (04) கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இடம்பெயர்ந்த அனைவரையும் மீள்குடியேற்றுவதற்கான திட்டத்தை வகுக்குமாறும் ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.