Breaking News
தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் சிறிலங்காவிலுள்ள உள்ள இந்திய தூதுவருடன் சந்திப்பு
இந்தியத் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் கலந்துகொண்ட நிலையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று (ஆகஸ்ட் 01) சிறிலங்காவுக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை சந்தித்துள்ளது.
இந்தியத் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் கலந்துகொண்ட நிலையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயர்ஸ்தானிகர் பாக்லேயின் அழைப்பின் பேரில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இணைந்தனர். இதன் போது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துதல், பொலிஸ் அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.