இந்தியாவுக்கு எதிரான இருபதுக்கு இருபது தொடர் : மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள ஐந்து இருபதுக்கு இருபது போட்டிகளிற்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள ஐந்து இருபதுக்கு இருபது போட்டி எதிர்வரும் மூன்றாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
குறித்த போட்டியில்,ரோவ்மேன் பவல் தலைமையில் கெய்ல் மேயர்ஸ், நிக்கோலஸ் பூரன், ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ், ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அகீல் உசேன், அல்ஜாரி ஜோசப், பிரன்டன் கிங், மெக்காய், ரோமரியோ ஷெப்பர்டு, ஒடியன் சுமித் மற்றும் ஒஷானே தாமஸ் ஆகியோர் உள்ளடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா அணி மேற்கிந்திய தீவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் , மூன்று ஒருநாள் போட்டிகள் , ஐந்து இருபதுக்கு இருபது போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.