பாரம்பரிய ஒயில் புல்லிங் காலையில் செய்வது சரியா? இரவில் செய்யலாமா?
ஒயில் புல்லிங் என்பது நல்ல ஈறு மற்றும் வாய் ஆரோக்கியத்திற்கு பரிந்துரைக்கப்படும் ஒரு பாரம்பரிய தீர்வாகும். இது வாயில் எண்ணெயை எடுத்துக் கொண்டு வாயை கொப்பளிக்கும் ஒரு முறை ஆகும். தற்போது இந்த முறை அதிக அளவில் பிரபலமாகிவருகிறது. பாரம்பரிய மருத்துவத்தை கடைபிடிக்கும் நிபுணர்களின் கூற்றுப்படி, வாயில் எண்ணெயை ஊற்றிக் கொப்பளிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.
15 முதல் 20 நிமிடங்களுக்கு மவுத்வாஷ் செய்வது போல வாயில் எண்ணெயை சுத்துவது இந்த நடைமுறையில் அடங்கும். இந்த நடைமுறையானது வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை குறைப்பதோடு, வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது. இது ஈறு நோய் மற்றும் வீக்கத்தைத் தடுக்கும். நமது உடலில் உள்ள குடல் நுண்ணுயிரிகளுக்கு நன்மைகளை செய்கிறது.
நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த வாயில் எண்ணெயை கொப்பளிப்பது (Oil Pulling) மிகவும் நல்லது. இது ஒரு ஆயுர்வேத முறையாகும். இதைச் செய்வதன் மூலம், வாயில் பாக்டீரியாக்கள் இல்லாமல் இருக்கும். காலையில் வெறும் வயிற்றில் ஆயில் புல்லிங் செய்யலாம். இதற்கு நல்லெண்ணெய் மிகவும் சிறந்தது.
ஆய்வுகளின்படி, ஒயில் புல்லிங் இரண்டும் உமிழ்நீரில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் மற்றும் படிந்திருக்கும் வெண்மையான படிமத்தை கணிசமாகக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டது, இதனால் ஈறு ஆரோக்கியம் மேம்படும்.
ஒயில் புல்லிங்கை தொடங்கும் போது, நல்ல தரமான சமையல் எண்ணெயைப் பயன்படுத்துவது நல்லது. இதற்கு நல்லெண்ணெய் பரிந்துரைக்கப்படுகிறது. நல்லெண்ணெய் எளிதில் உறிஞ்சக்கூடியது மற்றும் உண்ணக்கூடியது, எனவே இது வாய்வழி பயன்பாட்டிற்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது.
பாரம்பரிய மருத்துவத்தின்படி, ஒயில் புல்லிங் செய்த பிறகு அந்த எண்ணெயை விழுங்காமல் இருப்பது முக்கியம், ஏனெனில் அதில் நச்சுகள் இருக்கலாம்.
15 முதல் 20 நிமிடங்கள் வரை வாயில் எண்ணெயை வைத்து புல்லிங் செய்த பிறகு, துப்பிவிடவும். ஆனால், அதற்குப் பிறகு உடனடியாக பல் துலக்க வேண்டுமா அல்லது நல்ல பாக்டீரியாவைத் தக்கவைக்க அனுமதிக்க வேண்டுமா என்பதில் கருத்துக்கள் முரண்படுகின்றன.
ஒயில் புல்லிங் என்பது வேறொன்றும் இல்லை, காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் வாயில் எண்ணெயை ஊற்றி 10 நிமிடம் கொப்பளிக்க வேண்டும், அவ்வளவு தான். சுத்தமான நல்லெண்ணெய் 10 மிலி அளவு எடுத்து, வாயில் விட்டுக் கொண்டு, அதை வாய் முழுவதும் படும்படியாக கொப்பளிக்க வேண்டும்.
நமது வாயில் 600க்கும் மேற்பட்ட பாக்டீரியாக்கள் உள்ளன. சில நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் உங்கள் வாயில் ஆரோக்கியமான நுண்ணுயிரிகளை உருவாக்குகின்றன, மீதமுள்ளவை வாய் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் பல் சிதைவு, வாய் துர்நாற்றம், ஈறுகளில் இரத்தப்போக்கு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.
ஒயில் புல்லிங், கெட்ட பாக்டீரியாக்களை அகற்ற உதவுகிறது. யூனிசெல்லுலர் பாக்டீரியாக்கள் லிப்பிட் சவ்வு மூலம் மூடப்பட்டிருக்கும், இது எண்ணெயின் லிப்பிட் கட்டமைப்பில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. நீங்கள் எண்ணெயை உங்கள் வாயைச் சுற்றி சுழற்றும்போது, இந்த பாக்டீரியாக்கள் மென்மையான திசுக்களில் இருந்து பிரிந்து, எண்ணெயுடன் ஒட்டிக்கொண்டு, இறுதியில் நீங்கள் எண்ணெயைத் துப்பும்போது வெளியேறும். சவர்க்காரம் எப்படி துணிகளில் உள்ள அழுக்கு மூலக்கூறுகளை நீக்குகிறது என்பது போன்றதுதான் இந்த செயல்முறை.
ஒயில் புல்லிங் எப்போது செய்ய வேண்டும்? பல் துலக்குவதற்கு முன் அல்லது பல் துலக்கிய பின் ஆயில் புல்லிங் செய்ய வேண்டுமா? பல் துலக்குவதற்கு முன்பு ஆயில் புல்லிங் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. எப்போதும் காலையில் வெறும் வயிற்றில் ஆயில் புல்லிங் செய்யவேண்டும்.