சதம் அடித்து இலங்கையை வலுவான நிலைக்கு கொண்டுவந்த தனஞ்சய

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிகெட் போட்டி காலி மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
போட்டியின் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதனடிப்படையில், இரண்டாம் நாள் ஆட்டத்தில் இலங்கையின் துடுப்பாட்ட வீரர் தனஞ்சய டி சில்வா டெஸ்ட் போட்டிகளில் தனது 10ஆவது சதத்தை பதிவு செய்துள்ளார்.
இதன்போது, 175 பந்துகளில் 100 ஓட்டங்களை பெற்றார்.
போட்டியின் ஆரம்பத்தில் இலங்கை அணி, துடுப்பாட்டத்தில் சற்று தடுமாற்றத்துடன் ஆடியதால் 54 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுக்களை இழந்தது.
இதன்போது துடுப்பெடுத்தாடுவதற்காக தனஞ்சய டி சில்வாகளத்திற்கு வந்தார்.
இறுதியாக தனன்ஜய சில்வா 122 பற்துகளில் நஸீம் ஷாவின் பந்தில் ஷான் மசூட்டிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
இப்போட்டி நடைபெறும் காலி மைதானமானது சூழல்பந்து வீச்சாளர்களின் சாதகமானதாக பார்க்கப்படுகின்றது.