முன்னாள் குழந்தைகள் மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி மீது மோசடி வழக்கில் மீண்டும் விசாரணை
கிச்சின் தண்டனையை மீண்டும் நிலைநிறுத்துமாறு கோரி, கனடாவின் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்வதன் மூலம் அந்த தீர்ப்பைத் தவிர்க்க பொது வழக்குத் தொடுப்பு சேவை முயன்றது.

நோவா ஸ்காட்டியாவின் மோசடி தண்டனையை ரத்து செய்த தீர்ப்பின் மகுடத்தின் (கிரவுன்) மேல்முறையீட்டை விசாரிக்க கனடாவின் உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்ததைத் தொடர்ந்து, முன்னாள் குழந்தைகள் மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரிக்கு புதிய விசாரணையைத் தொடரப்போவதாக நோவா ஸ்காட்டியாவின் அரசுத் தரப்புச் சேவை தெரிவித்துள்ளது.
வழமை போல, கனடாவின் உச்ச நீதிமன்றம் ஹாலிஃபாக்ஸில் உள்ள ஐ.டபிள்யூ.கே சுகாதார மையத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி டிரேசி கிச்சுக்கு எதிரான வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கான அனுமதியை மறுத்த தனது முடிவை விளக்கவில்லை.
"நாங்கள் எதிர்பார்த்த முடிவு இதுவல்ல என்றாலும், நாங்கள் விசாரணையைத் தொடர்வோம்" என்று நோவா ஸ்காட்டியா பொது வழக்குத் தொடுப்புச் சேவையின் செய்தித் தொடர்பாளர் ஒரு மின்னஞ்சலில் தெரிவித்தார்.
இந்த வழக்கு எப்போது நீதிமன்றத்திற்கு திரும்பும் என்பது குறித்து அதிகாரிகளிடமிருந்து உடனடியாக எந்த தகவலும் இல்லை. அதே நேரத்தில் கிச்சின் வழக்கறிஞர் பிரையன் கிரீன்ஸ்பான் உடனடியாக கருத்துத் தெரிவிக்க கிடைக்கவில்லை.
சிக்கலான மற்றும் நீண்ட வழக்கில், நோவா ஸ்காட்டியாவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவரது தண்டனையை ரத்து செய்தபோது புதிய விசாரணைக்கு உத்தரவிட்டது.
கிச்சின் தண்டனையை மீண்டும் நிலைநிறுத்துமாறு கோரி, கனடாவின் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்வதன் மூலம் அந்த தீர்ப்பைத் தவிர்க்க பொது வழக்குத் தொடுப்பு சேவை முயன்றது. இந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்தபோது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. எனவே இப்போது ஒரு புதிய விசாரணை தொடர வேண்டும்.
47,000 டாலர் தனிப்பட்ட செலவுகளுக்கு செலுத்த தனது நிறுவனக் கடன் அட்டையைப் (கார்ப்பரேட் கிரெடிட் கார்டு) பயன்படுத்தியதற்காக 2022 ஆகஸ்டில் கிச் ஐந்து மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். மேலும் அவரது மேல்முறையீடு நிலுவையில் இருக்கும் வரை பிணையில் விடுவிக்கப்பட்டார். மார்ச் மாதம், நோவா ஸ்காட்டியா மேல்முறையீட்டு நீதிமன்றம் கிச்சுக்கு ஒரு புதிய விசாரணைக்கு அழைப்பு விடுத்தது.