Breaking News
காலிஸ்தான் தீவிரவாதி நிஜ்ஜாருக்குக் கனடா நாடாளுமன்றத்தில் மவுன அஞ்சலி
"தீவிரவாதத்திற்கு அரசியல் இடம் கொடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் நாங்கள் எதிர்க்கிறோம்" என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால் வாராந்திர மாநாட்டில் கூறினார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே நகரில் காலிஸ்தான் புலி படை பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டு சரியாக ஒரு வருடம் கழித்து ஜூன் 18 அன்று கனடா நாடாளுமன்றம் மவுன அஞ்சலி செலுத்தியதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
"தீவிரவாதத்திற்கு அரசியல் இடம் கொடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் நாங்கள் எதிர்க்கிறோம்" என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால் வாராந்திர மாநாட்டில் கூறினார்.
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் நினைவாக கனடாவின் பொதுச் சபை (ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்) 'ஒரு கணம்' மவுன அஞ்சலி செலுத்தியது.