Breaking News
கெஹெலிய பதவி விலகியதை அடுத்து சுற்றாடல் அமைச்சர் பதவியை ஜனாதிபதியே தக்க வைத்துக் கொள்வார்
கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக பதவி வகித்த காலத்தில் தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் தனது பதவியை விட்டு விலகியுள்ளார்.
பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, சுற்றாடல் அமைச்சர் பதவியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தக்க வைத்துக் கொள்ள தீர்மானித்துள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் சுற்றாடல் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக பதவி வகித்த காலத்தில் தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் தனது பதவியை விட்டு விலகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காகக் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்குச் சென்ற பின்னர் ரம்புக்வெல்ல பெப்ரவரி 02 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.