Breaking News
கை-கான்கார்டியா மெட்ரோ நிலையத்திற்குள் கத்தியால் குத்திப்பட்ட இளைஞர் பலி
37 வயதான அந்த இளைஞர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிறிது நேரத்தில் அவர் இறந்தார்.
கை-கன்கார்டியா மெட்ரோ நிலையத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 37 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மொன்றியல் நகர காவல் துறையின் (Service de Police de la Ville de Montréal) தகவல்படி, கிழக்கு நோக்கி ஹொனோரெ-பியூகிராண்ட் (Honoré-Beaugrand) முனையத்தை நோக்கிச் செல்லும் இரயில்களுக்காக மெட்ரோ நிலையத்தின் நடைமேடையில் இரவு 11:20 மணியளவில் இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஒருவர் மற்றொருவரைக் கூர்மையான பொருளால் குத்தினார்.
37 வயதான அந்த இளைஞர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிறிது நேரத்தில் அவர் இறந்தார்.
சந்தேகக் குற்றவாளி சம்பவ இடத்திலிருந்து கால்நடையாக தப்பிச் சென்றதாகவும், யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் மொன்றியல் நகர காவல்துறை தெரிவித்துள்ளது.