Breaking News
மோட்டார் சைக்கிள் ஓட்டுனருடன் ஏற்பட்ட மோதலில் வயதான முதியவர் பலி
அந்த முதியவரை அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஹைதராபாத்தில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனருடன் ஏற்பட்ட மோதலில் முதியவர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
அல்வாலில் பரபரப்பான சாலையைக் கடக்கும் நபர், பைக் ஓட்டியவரிடம் வேகத்தைக் குறைக்கச் சொன்னபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சம்பவத்தின் சிசிடிவி காணொலியில், பைக் ஓட்டுபவர், ஆத்திரத்தில், முதியவரைத் தாக்கியதில், முதியவர் தரையில் விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்ததைக் காட்டுகிறது.
அந்த முதியவரை அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரைக் கைது செய்தனர்.