5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
குழந்தையின் அந்தரங்க உறுப்புகள் மற்றும் வயிற்றில் வலி இருப்பதாக புகார் கூறியதை அடுத்து, அவரது தாயாருக்கு இந்த தாக்குதல் நடந்துள்ளது தெரிய வந்தது.

ஒரு வருடம் நீடித்த விசாரணைக்குப் பிறகு, மதுரா மாவட்டத்தில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 35 வயது வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு 55,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் டாக்சி ஓட்டுநராகப் பணிபுரியும் பாதிக்கப்பட்டவரின் தந்தை அளித்த புகாரின்படி, செப்டம்பர் 7, 2021 அன்று மஹாவான் காவல் நிலையத்தில் இந்த வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. அதில் அவர் “தனது பக்கத்து வீட்டுக்காரர் தனது மகளுக்கு சாக்லேட்டுகளைக் கொடுத்து ஏமாற்றி அழைத்துச் சென்றார். செப்டம்பர் 4, 2021 அன்று அவரை அருகிலுள்ள வெறிச்சோடிய வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இந்த விஷயத்தை யாரிடமாவது தெரிவித்தால் பெற்றோரைக் கொன்று விடுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர் குழந்தையை மிரட்டினார். குழந்தையின் அந்தரங்க உறுப்புகள் மற்றும் வயிற்றில் வலி இருப்பதாக புகார் கூறியதை அடுத்து, அவரது தாயாருக்கு இந்த தாக்குதல் நடந்துள்ளது தெரிய வந்தது.
பின்னர், இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகள் 376 ஏபி (பன்னிரண்டு வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணை கற்பழித்தல்), 506 (குற்றவியல் மிரட்டல்) மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவு 5/6 ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. சிறப்பு மாவட்ட அரசு ஆலோசகர் (போக்சோ), அல்கா உப்மன்யு கூறுகையில், "கடந்த செப்டம்பர் 9, 2021 அன்று காவல் துறை குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்து, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த எட்டு நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. விசாரணையின் போது, குழந்தை சம்பவம் குறித்து துல்லியமான சாட்சியம் அளித்தது. ஏழு சாட்சிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். குழந்தையின் மருத்துவ அறிக்கையும் குற்றம் சாட்டப்பட்டவரின் தண்டனையில் முக்கிய பங்கு வகித்தது, அவர் முன்பு நீதிமன்றத்தால் ஜாமீன் மறுக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்."