Breaking News
3 விமானங்களுக்கு மிரட்டல் விடுத்த சிறுவன் கைது
மும்பைக்கு செல்லும் சில விமானங்களில் வெடிகுண்டு மிரட்டல் வருவதாக தங்களுக்கு புகார்கள் வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவனை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மும்பைக்கு செல்லும் சில விமானங்களில் வெடிகுண்டு மிரட்டல் வருவதாக தங்களுக்கு புகார்கள் வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சில சமூக ஊடகப் பதிவுகள் மூலம் இந்த அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.
விசாரணையில், இந்த பதவுகளின் பின்னணியில் சத்தீஸ்கரைச் சேர்ந்த ஒரு இளவல் சிறுவன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பெற்றோருக்கு அறிவிப்பு கொடுத்த பின்னர் சிறுவனைக் கைது செய்து சிறார் நீதி வாரியத்திடம் ஒப்படைத்தனர்.